தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் நீக்கம்; அமைச்சரவை அனுமதி
தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தில் நடக்கும் பெரும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாரிய சிக்கல்கள்
அண்மையில் தொடருந்து சமிக்ஞை தொகுதியை சீரமைப்பதற்காக பெரும் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் சீரான திட்டம் முன்னெடுக்கப்படாததால் தொடருந்து சமிக்ஞையில் பாரிய சிக்கல்கள் அண்மைக்காலங்களில் ஏற்பட்டது.
சில சமிக்ஞை விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சில சீராக இயங்குவதில்லை. சிலாபத்தில் இருந்து வந்த தொடருந்து ஒன்று ராகமை நிலையத்தை வந்தடைந்து கொழும்பை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் போது சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறை, அவதானித்த தொடருந்து ஓட்டுனர் அது தொடர்பில் நிலையத்திற்கு அறிவித்த பின்னர் தொடருந்தை செலுத்தியுள்ளார்.
கடவையில் விபத்திற்கு உள்ளான வான்
அவர் அதை அவதானிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்க கூடும். அத்தோடு பேருவளை பகுதியில் தொடருந்து கடவையில் சமிக்ஞை இயங்காததால் சிறிய ரக வான் ஒன்று விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
இவ்வாறு பல சிக்கல்கள் மோசடிகள் நிறைந்த திணைக்களமாக மாற்றப்பட்டுள்ளதால் அதனை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே பொது முகாமையாளர் நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




