தொடருந்து திணைக்களத்தின் கடுமையான நடவடிக்கை! தரகர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி
இலங்கை தொடருந்து திணைக்களம் மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கை காரணமாக ஆசனப் பதிவு முறையில் இடம்பெற்று வந்த மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அழகான இயற்கைக் காட்சிகளை கண்டு களித்தபடி பயணம் செய்ய முடியும் என்பதன் காரணமாக மலையகத்துக்கான தொடருந்துகளின் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் முதலாம், இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் ஆசனங்ளில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மோசடி
அதனை அடிப்படையாக வைத்து வேறொருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மோசடியொன்று அண்மைக்காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களில் உரியவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்றொரு புதிய நடைமுறையை இலங்கை தொடருந்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அவ்வாறு ஆசனப் பதிவுகளை மேற்கொண்டவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபித்தால் மாத்திரமே உரிய ஆசனங்கள் அவர்களுக்கு வழங்கப்படும். உள்நாட்டவர்களாக இருந்தால் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக இருந்தால் அவர்களின் கடவுச்சீட்டு அதற்கான முக்கிய ஆவணங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய நிலையில் புறப்பட்ட தொடருந்து
இதன் காரணமாக தங்கள் பெயர்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து வேறு நபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த தரகர்களின் மோசடி செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டுள்ளது.
இன்று காலை கொழும்பில் இருந்து பதுளைக்குப் புறப்பட்ட தொடருந்தின் முதலாம் வகுப்பு ஆசனங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டடிருந்த போதும் அடையாளத்தை நிரூபிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக முதலாம், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் வெறிச்சோடிய நிலையில் தொடருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
தங்கள் பெயரில் ஆசனப்பதிவை மேற்கொண்டிருந்த உள்நாட்டு பயணிகள் ஆறுபேரும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எட்டுப் பேரும் மட்டுமே குறித்த தொடருந்தில் பயணித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 23 மணி நேரம் முன்

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
