வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சை நிலையங்களில் திடீர் சோதனை (Photos)
வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் சுகாதாரப் பிரிவினர் இன்று (12.10.2023) திடீர் சோதனையை முன்னெடுத்தனர்.
எதிர்வரும் ஞாயிறு (15.10.2023) காலை 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் நாடு பூராகவும் நடைபெறவுள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் டெங்கு நோய் தொற்று மற்றும் நுளம்புகளின் பெருக்கம் உள்ளதா என வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாரிகாலம் ஆரம்பித்துள்ளமையால், நுளம்பு பெருக்கம் ஏற்படக் கூடிய இடங்களை அழிக்குமாறும், நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது சுகாதாரப் பிரிவினரால் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
