வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
புதிய இணைப்பு
வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்னால் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் தீர்மானத்திற்கமைவாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் இன்று (12.10.2023) வவுனியா பல்கலைக் கழகத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ''தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்க, பல்கலைக்கழக கல்விசாரா பணியிடங்களை உடனடியாக நிரப்பு' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில், பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு
எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் தீர்மானத்திற்கமைவாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் (12.10.2023) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இன்று மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மொழித் தேர்ச்சி கொடுப்பனவை மீள் வழங்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு.
மேலும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை ஓய்வூதிய நிதிகளை கொள்ளையடிக்காதே, அரசே அரச பல்கலைக்கழக முறைமையை காப்பாற்று, வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்றாற்போல் சம்பள அதிகரிப்பை வழங்கு"உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழில் பாரிய பண மோசடிகள்! மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
மேலதிக தகவல் : திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |