யாழில் பாரிய பண மோசடிகள்! மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
யாழில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 9 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
தற்போது யாழில் பெருமளவில் பண மோசடிகளே இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல், கடந்த செப்டெம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பண மோசடிகள் தொடர்பில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பிலானது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடாத்தியதில் இதுவரையில் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் : தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
