திடீரென உயிரிழந்த தாய்: ராகம வைத்தியசாலையில் மகன்களால் ஏற்பட்ட பெரும் குழப்பம்
கொழும்பு - ராகம வைத்தியசாலையின், வைத்தியர் ஒருவரும் தாதி ஒருவரும், நோயாளி ஒருவரின் மகன்களால் தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராகம வைத்தியசாலையின் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் மகன்கள் இவ்வாறு வைத்தியர் மற்றும் தாதி மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் தொடர்பான நோயினால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 22ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த தாய் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.
சூரியபாலுவ கடவட பிரதேசத்தில் வசித்து வந்த உயிரிழந்த தாயாரின் மகன்கள் நேற்று (24) காலை ராகம வைத்தியசாலையின் 22 ஆம் விடுதிக்கு வந்து தாயின் மரணம் தொடர்பில் ஊழியர்களுடன் முரண்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், உயிரிழந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கவில்லை எனவும் மகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அது மோதலாக மாறியுள்ளது.
இதன்போது தாக்கப்பட்டு காயமடைந்த வைத்தியர் மற்றும் தாதி ஒருவரும் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் ராகம வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி ராகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தாக்கிய நபர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
