புதிய ராடார் கட்டமைப்புடன் கொழும்பிற்குள் நுழைந்த கப்பல்! (VIDEO)
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொடுத்து தன்னை காப்பாற்றுவதற்குரிய முயற்சியை இந்தியா மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தோ - பசுபிக் பிராந்திய போட்டிக்களத்தில் பங்குதாரராக காணப்படும் இந்தியாவினை களமுனையில் இழுக்க மேற்கத்திய நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் இந்தியா நேரடி போட்டி தன்மையை தவிர்க்கும் முயற்சியை தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் காலூண்டும் அமெரிக்காவின் ஆதிக்கத்தினை தனது பாதுகாப்பிற்காக கட்டுப்படுத்த இந்தியாவின் ஊடாக ரஷ்யாவை இலங்கைக்குள் கொண்டுவரும் காய் நகர்த்தும் இரகசிய திட்டத்தினை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நகர்வு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
