இந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழையும் சோனியா காந்தியின் உருவபொம்மை எரித்த தமிழக பெண்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டத்தரணி ஆர். சுதா (R. Sudha) இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
மயிலாடுதுறையில் அளிக்கப்பட்ட 10,88,182 வாக்குகளில் 5,18,459 வாக்குகளை பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
குறித்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளையும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
காங்கிரஸுக்கு எதிரான போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆர்.சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா பங்குபற்றியிருந்தார்.
மேலும், அவர் இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது, காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு சோனியா காந்தியின் உருவபொம்மை எரிக்கும் போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |