துயரை தந்துள்ள சம்பந்தனின் மரணம் : டக்ளஸ் இரங்கல்
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மரணித்து விட்ட செய்தி  துயரை தந்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனின்(R.Sampanthan) மரணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம காலத்தில் பயணித்த தலைவர்
மேலும், தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர், கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.

முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு.
வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்து விட்ட செய்தி துயரை தந்துள்ளது. அவரது இழப்பில் துயருறும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன். அவருக்கு எமது அஞ்சலி என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        