சம்பந்தனின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல்
இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
