மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் இடங்களில் விரைவு என்டிஜன் சோதனை! 13 பேருக்கு தொற்று உறுதி
மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விரைவு என்டிஜன் சோதனைகளில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 10986 விரைவு என்டிஜன் சோதனைகளில் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களாக 377 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட 1,359 பரிசோதனைகள் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை இந்த விரைவு ஆன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam