திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்வி

Parliament of Sri Lanka Trincomalee Kathiravelu Shanmugam Kugathasan
By H. A. Roshan Jul 09, 2026 04:35 AM GMT
Report

இலங்கை நாடாளுமன்ற அமர்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் நேற்று(08.07.2026) பிரதமரிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டன.

இலங்கையின் அரிசி உற்பத்தியைப்பெருக்க வேண்டும் என்று அரசு கூறுகின்றது.எனினும் திருகோணமலைமாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்புமக்கள் நெற்செய்கை மேற்கொண்டு வந்த 205 சிறு குளங்களும் 25 அணைக்கட்டுகளும் கைவிடப்பட்டு உள்ளன. இதனைப் பிரதமர் அறிவாரா? இதற்கான காரணம் என்ன? என நாடாளுமன்ற உறுப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

நாட்டின் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்கு

மேற்படி குளங்களையும் அணைக்கட்டுக்களையும் மீண்டும் நெற்செய்கைக்கு கொண்டு வருவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனவா? அப்படியாயின் அவை யாவை? என கேட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்வி | Question Raised By Trinco Mp To The Prime Minister

திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் விவசாயம் செய்த மக்களிடம் ஆவணங்கள் உள்ள 33,563 ஏக்கர் நிலத்தை வனத்துறையும் 31,627 ஏக்கர் நிலத்தை வனவிலங்குத் துறையும் கையகப்படுத்தி வைத்துக் கொண்டு அவற்றில் மக்கள் விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றது. 

இதனைப் பிரதமர் அறிவாரா? இவற்றை விடுவிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இந்த நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைத்து நாட்டின் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசு ஆவன செய்யுமா? ஆம் எனின் எப்பொழுது? என கேட்கப்பட்டது.

மேற்படி நிலங்களை விடுவித்து குளங்களை மறுசீரமைத்து மக்கள் விவசாயம் செய்யவும் அரிசி உற்பத்தியை பெருக்கவும் பிரதமர் ஆவன செய்வாரா எனவும் கேள்வி கேட்டார்.

மக்களை மீள்குடியேறவிடாமல் 

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவானது 32042 ஏக்கர் பரப்புடையது. இதில் 78வீதமான பரப்பை வனவிலங்குத் துறையும் , 22வீதமான பரப்பை வனத்துறையும் உரிமைகோரி வருகின்றனர். இதற்குள் ஆவணங்கள் உள்ள 4778 குடும்பங்களும்18 பாடசாலைகளும், 96 சமய வழிபாட்டு இடங்களும் பிரதேச சபைப் பணிமனை, பிரதேச செயலாளர் அலுவலகம், பொலிஸ் அலுவலகம் முதலியனவும் காணப்படுகின்றன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்வி | Question Raised By Trinco Mp To The Prime Minister

இவர்கள் எவரும் வனத்துறை, வனவிலங்குத் துறையின் ஒப்புதல் இல்லாமல் தத்தமது இடங்களில் எந்த வேலையும் செய்ய முடியாதுள்ளது. இதனைப் பிரதமர் அறிவாரா? அறிந்தால் இதைத் தீர்க்க என்ன செய்யப் போகிறார்? வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கல்லரிப்பு என்னும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் நீளமான 1 மீட்டர் அகலமான கால்வாயை அமைக்க வனவிலங்குத் துறை அனுமதி மறுக்கிறது.

ஆனால் காடுகளை வெட்டி 5 மீட்டர் அகலமும் 50 கிலோமீட்டர் நீளமுமான வீதியை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இதற்குப் பிரதமர் என்ன சொல்லப் போகின்றார் ? வெல்வேரி என்னும் கிராம சேவகர் பிரிவில் வாழ்ந்த 50 குடும்பங்கள் போரால் இடம்பெயர்ந்தன.

அந்த இடங்களை வனத்துறை பிடித்து வைத்துக்கொண்டு, அந்த மக்களை அங்கு மீள்குடியேறவிடாமல் தடுத்து வருகிறது. அந்த இடத்தை ஹெட்டியாராச்சி என்ற முதலாளிக்கு நீண்டகாலக் குத்தகைக்கு கொடுத்துள்ளது. இது எந்த வகையில் நீதி எனவும் கேள்வி எழுப்பினார்.

நீர்கொழும்பு சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதலில் இந்திய கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதலில் இந்திய கைதி உயிரிழப்பு

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு வீழ்ச்சி!

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு வீழ்ச்சி!

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US