சுவிட்சர்லாந்து வரலாற்றில் இராணி பட்டம் பெற்ற முதல் ஈழத்தமிழ் பெண்
இராணி பேர்த்த பதக்கம் வழங்கும் விழாவானது சுவிட்சர்லாந்து- பேர்ண் மேற்குப்பகுதியில் Bienzgut, Heuboden என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் பதக்கம் வழங்கும் நிகழ்வானது தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.
2025 ஆம் ஆண்டு இந்தப் பதக்கமானது இருவருக்கு கிடைத்துள்ளது.
இராணி பட்டம்
இந்தநிலையில், இணையர் நந்தினி முருகவேள். சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரசபையின் சமுதாய அரசபணியாளர்களில் ஈழத்தமிழரான பேர்ண் வள்ளுவன் பள்ளி ஆசிரியை நந்தினி முர்கவேளுக்கு பேர்ண் நகரின் 2025 ஆம் ஆண்டிற்கான முடியரசி (இராணி) என்ற பட்டம் வழங்கி நகரசபை மதிப்பளித்துள்ளது.
இவர் பேர்ண் நகரப்பகுதியிலும், பேரண்மேற்குப்பகுதியிலும், தனது சமுகாயத்தின் ஒருங்கிணைப்புக்காக அவர் அயராது பாடுபடுகிறார்.
சமூக-பண்பாட்டு நடவடிக்கைகளில் ஓர் பாலமாக தனது சமுதாயத்துடன் இருக்கின்றார்.பெண்களுக்கான பல திட்டங்களுக்கு பொறுப்பாகக் கடமையாற்றகின்றார். வயோதிபர்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகின்றார்.
பொதுவாக பேர்ண் நகரப்பதியிலும் பேர்ண் மேற்குப்பகுதியிலும் அவர் ஓர் முக்கியமான ஆளாக தமிழ்மக்களுக்கும்,ஏனையோருக்கும் கடமையாற்றுகின்ற ஓர் சிறந்த சமூகசேவையாளராகவும், காணப்படுகின்றார்.
தமிழ் மக்களுக்கு சேவை
இதற்கு அப்பால் தேவைப்படும் இடங்களில் மகிழ்ச்சியாக இலவசமாக தனது சேவையை தமிழ்மக்களுக்கு ஆற்றி வருகின்றார். தனது கணவருடன் பேர்ண் வள்ளுவன் பள்ளியையும் நடத்தி வருகின்றார்.
இவ்வாறான பல செயற்பாடுகளையும் திறமையாக செயற்படுத்தி வருவதால் அவரை இந்த ஆண்டு நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம் என்று இவ் விழாவினை ஏற்பாடு செய்திருந்த நகரசபை அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, பீட்டர் பிளேசர் என்பவர் பல ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களில் அயராது தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார்.
இவர் SP கட்சியின் ஓர் முக்கியமான உறுப்பினர்.இவரின் பிரதான பணிகளாக முக்கியமான திட்டங்களை உருவாக்குதல்,அவற்றை நடைமுறைப்படுத்தல். இவை போன்ற மக்களுக்குத் தேவையான திட்டங்களை நீண்டகாலமாக விருப்புடன் செயற்படுத்தி வருகின்றார்.
இவ்வாறான மக்களுக்குத் தேவையான ஓர் சிறந்த மனிதரையும் தெரிவு செய்திருக்கின்றோம் என நகரசபை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மொழிபெயர்ப்பாளர்
பேர்ண் மேற்குப்பகுதியில் அனைத்து சமூகசேவையாளர்களுக்கும் பொறுப்பாகக் கடமையாற்றும் VBG அரச அமைப்பின் மேலதிகாரி ஸ்டெபானி ஷார் (Steffi) தனது உரையில் 2000 ஆம் ஆண்டு சுவிசிற்கு வருகைதந்த நந்தினி மிக விரைவாக யேர்மன்மொழியைக் கற்று ஏனைய கற்கை நெறிகளையும் யேர்மன் மொழியில் கற்று முடித்தார்.
2006 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அரசாங்க பல்பண்பாட்டு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றகின்றார்.இவர் பாடசாலை வைத்தியசாலை, நீதிமன்றம், பொலிஸ்துறை பெண்கள் பாதுகாப்பு விடுதி எனப் பல்வேறு அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பை மேற்கொள்கின்றார்.
அத்துடன் ஓர் கணக்காய்வாளராகவும் கடமையாற்றுகின்றார். 2010 ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேற்றுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வகுப்புக்களுக்கான ஓர் ஒருங்கிணைப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.
அதே ஆண்டில் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான கலந்துரையாடல் என்னும் திட்டத்திற்கு பொறுப்பாக கடமையாற்றவதுடன் வயோதிபர்களுக்கான பல திட்டங்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகின்றார்.அத்துடன் பேர்ண் மேற்குப் பகுதியின் சமூகசேவையாளராகவும்,ஆலோசகராகவும், செயலாளராகவும் என்னுடன் கடமையாற்றுகின்றார்.
பேர்ண் வள்ளுவன் பள்ளியின் ஆசிரியையாகவும் கடமையாற்றுகின்றார்.இவர் எந்த வேலையை செய்தாலும் முழுமனதுடன், நம்பிக்கையுடன்,மேற்கொள்ளார்.இவர் அதிகளவு மணித்தியாலங்களை தன்னுடைய நாட்டு மக்களுக்காக இலவசமாக ஆற்றுவார்.இவரின் சேவை பெருமைக்குரியதும், பாராட்டுக்குமுரியதாகும்.இவருடைய குடும்பம் மிக அழகானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவிப்பு
அத்தோடு,செந்தமிழ் அருட்சுனையரும், சமய உளவள ஆற்றுப்படுத்துநருமாகிய தர்மலிங்கம் சசிக்குமார் கருத்துத் தெரிவிக்கையில், இணையர் நந்தினி முருகவேள் எங்களுடன் நீண்டகாலமாக இணைந்து பல திட்டங்களில் கடமையாற்றுகின்றார்.
எங்களுடைய ஓர் முக்கியமான திட்டமாக எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலம் வாழும் தமிழர்கள் முதுமையில் இணக்கமாக மகிழ்வுடன் வாழக்கூடிய ஓர் மூதாளர் இல்லம் அமைப்பது தமிழ்க்குடில் தொடர்பானதாகும்.
இணயர் நந்தினி முருகவேள் தனது உரையில், இன்று நான் பேர்ண் நகரசபையால் மதிப்பளிப்பினைப் பெற்றுக்கொள்கின்றேன். என்றால் அதற்கு பலர் காரணம். முதலில் என்னுடைய பெற்றோர்கள். என்னுடைய தந்தை கிருஸ்ணசாமி,என்னுடைய தாயார் அன்னலட்சுமி.
இலங்கையில் சிறுவயதிலிருந்து என்னுடைய பல்கலைக்கழக கற்கைநெறி வரை என்னுடன் அயராது பாடுபட்டவர்கள். என்னுடைய அப்பாவும் ஓர் சிறந்த சமுதாயப்பணியாளர்.
என்னுடைய 5 சகோதரிகளும் அன்றும்,இன்றும், என்றும் எனக்கு ஊக்குவிப்பாக,ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்.அடுத்து என்னுடைய கணவரும்,இரண்டு பிள்ளைகளும், என்னுடன் கடமையாற்றும் எனது தோழி Steffi என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், எனது வேலையிலும் மிகவும் உதவியாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
9 Dec 2021ம் ஆண்டில் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




