பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞனின் மோசமான செயல்
பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கை தமிழ் இளைஞன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்.
சவுத்தாம்ப்டனில் வசிக்கும் 37 வயதான இளைஞனே இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை, பொதுச் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை மற்றும் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை
குறித்த இளைஞருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று சவுத்தாம்ப்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
இதன்போது நீதிமன்றில் முன்னிலையான அவர், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை 2026 மார்ச் 10ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.




