பிரித்தானிய அரச செங்கோலை அலங்கரிக்கும் வைரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
பிரித்தானிய அரச பரம்பரையின் செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைர கல்லினை திருப்பி தருமாறுக்கோரி தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் சுரங்கத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட கிரேட் ஸ்டார்,கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் வைரமொன்று பிரித்தானிய அரச குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வைரம் அரச செங்கோலில் பதிக்கப்பட்டுள்ளது.

சிலுவையுடன் கூடிய செங்கோல்
உலகின் மிக பெரிய, 530.2 கெரட் கொண்ட நீர் துளி வடிவிலான இந்த வைரம், சிலுவையுடன் கூடிய செங்கோலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் மறைவையடுத்து, இந்த கல்லினன் வைரம் தங்களுக்கு சொந்தமானது என்றும் அதனை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படியும் தென்னாப்பிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் கைவசம் உள்ள தங்களது நாடுகளின் பல்வேறு வைரங்களை திருப்பி ஒப்படைக்கும்படி கோரி சமூக ஊடகங்களில் பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.

வைரத்தின் பணமதிப்பு

இதனை திருப்பியளிக்குமாறு 6 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஆன்லைன் வழியே மனு அளிக்கும் கோரிக்கையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைரத்தின் உண்மையான பணமதிப்பு வெளிவராத நிலையில், அரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைரம் அதிக பணமதிப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri