ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்றதாகவும், இது வின்ட்சர் டீனால் நடத்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் ராணியின் உடல் அடக்கம் - ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் இன்று சற்று நேரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்குள் இருக்கும் கிங் ஜார்ஜ் VI நினைவு பகுதியில், அவரது மறைந்த கணவர் எடின்பர்க் டியூக்குடன் ராணி உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதில் மன்னர் சார்லஸ் III மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக அறிவிப்பு
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் விவரங்கள் வெளியிடப்படவில்லை, பக்கிங்ஹாம் அரண்மனை இதை தனிப்பட்ட குடும்ப நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளது.
17 மாதங்களுக்கு முன்பு ராணியின் கணவர் பிலிப் இறந்தபோது, அவரது சவப்பெட்டி செயின்ட் ஜோர்ஜ்ஸின் ரோயல் வால்ட்டில் வைக்கப்பட்டதுடன், ராணி இறந்தபோது நினைவு தேவாலயத்திற்கு மாற்ற தயாராக இருந்தது.
1969 ஆம் கட்டப்பட்ட இந்த நினைவுப் பகுதியில், ராணியின் தந்தை ஜார்ஜ் VI, ராணியின் தாய் மற்றும் ராணியின் சகோதரி இளவரசி மார்கரெட் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.