ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலில்
கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும் முல்லைத்தீவு விமானப் படை தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் மோசமான சூழ்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்டத்திருத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர் கல்வித் துறை இராணுவ மயமாக்கப்படுவதை கண்டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட 33 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 25 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
