வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்துகளுக்கான டீசல் QR - விசேட ஒழுங்குகள் விரைவில்..
வடக்கு மாகாணத்தில் சேவையில் ,ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை, எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' (QR) முறைமை ஊடாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நெருக்கடியான சூழலைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் எரிபொருள் விநியோகத்தில் சில மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் ஒதுக்கீடு
எனினும், பொதுப்போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்களின் வசதி கருதி, தற்போது வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அவர்கள் தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய ஏற்பாடுகளை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைவாக, ஒவ்வொரு தனியார் பேருந்தினதும் வழித்தட அனுமதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் இருவழிப் பயணத்துக்குத் தேவையான எரிபொருளின் அளவு துல்லியமாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பீட்டுக்கு அமைய ஒவ்வொரு பேருந்துக்குமான உரிய எரிபொருள் ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டு, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அதற்கான விசேட 'கியூ.ஆர்' வழங்கப்படும்.
அந்த 'கியூ.ஆர்' குறியீட்டைப் பயன்படுத்தி, அவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இனிவரும் காலங்களில் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்' என அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 20 மணி நேரம் முன்
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam