மட்டு.வவுனதீவில் எரிபொருள் விநியோகம்(Photo)
மட்டக்களப்பு - புதுமண்டபத்தடியில் உள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் அட்டை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து 3,4,5 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு இன்று (28) காலை பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் விநியோகம்
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கும் அரசாங்க திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கும் சுமூகமான முறையில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் அட்டை பதிவு
இதன்போது வவுனதீவு பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் விக்ரமசிங்க தலைமையில், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் சசீந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கியூ. ஆர் அட்டை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மட்டக்களப்பில் அரசாங்கத்தின் குடும்ப அட்டைக்கு பெட்ரோல் விநியோகம் (Photo) |