நாடளாவிய ரீதியில் கியூ.ஆர் அட்டைக்கமைய எரிபொருள் விநியோகம் (Photos)
நாடாளவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் கியூ.ஆர் அட்டை முறையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய எரிபொருள் விநியோகம் இன்று(3) பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முறிகண்டி
முறிகண்டியில் அமைந்துள்ள பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் நடைமுறையின் கீழ் இன்று(3) காலை 7 மணியளவில் எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
பார ஊர்திகள் சங்கத்தின் தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோரின் கண்காணிப்பில் தொடர் இலக்கங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி, பளை போன்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை
கல்முனை ஐ.ஒ.சி எரிபொருள் நிலையத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய கியூ.ஆர் அட்டை திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு இன்று(3) எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கல்முனை திலகா எரிபொருள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய கியூ.ஆர் அட்டை முறை மூலம் முதல் தடவையாக பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனங்களின் இறுதி இலக்கங்களுக்கு அமைய கடந்த தினங்களாக எரிபொருளை பெற்றுக்கொள்ளாத பொதுமக்களுக்கும் இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரும், முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரும், கார் வாகனங்களுக்கு 20 லீட்டரும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகம்
அத்துடன் கரப்பிணிகள், மத தலைவர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் ,நோய் பிணியாளர்களுக்கும் இடையிடையே முன்னுரிமை வழங்கப்பட்டு எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்னும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாக பின்பற்றப்படாமையினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்தி - எரிமலை