சட்டவிரோதமாக கடற்சிப்பிகள் வைத்திருந்த நபரொருவர் கைது (Photos)
கற்பிட்டி - தேத்தாவாடிய பகுதியில் தோட்டமொன்றில் அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் கற்பிட்டி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 5636 கிலோகிராம் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய எனவும், அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபருடன், மீட்கப்பட்டுள்ள கடற்சிப்பிகளை கற்பிட்டி நீதிமன்றத்தில்
சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
