சட்டவிரோதமாக எரிபொருளை உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் கைது (Photos)
திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை லொறியொன்றில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 521 லீட்டர் டீசலை அனுமதிப்பதிரமின்றி கொண்டுசென்ற சந்தேகநபரொருவரையே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையை சேர்ந்தவர் கைது
தம்புள்ளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையே நேற்றிரவு(21) கைது செய்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தில் என்னூற்றி ஐம்பது ரூபாயிக்கு எரிபொருளை வாங்கி தம்புள்ளை பகுதிக்கு கூடுதலான விலைக்கு விற்பதற்காக சிறிய லொறியொன்றில் சந்தேகநபர் ஏற்றி சென்றுள்ளார்.
இவ்வாறு ஏற்றி செல்லும் போது கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், டீசலை கொண்டு செல்வதற்காக சந்தேகநபர் பயன்படுத்திய லொறி கந்தளாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதி ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்பு (PHOTOS) |




