போதைவஸ்து, ஆயுத கடத்தல் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு முகவர்கள் தேடுதல் நடவடிக்கை
போதைவஸ்து மற்றும் இலங்கையிலிருந்து ஆயுதங்களை கடத்தல் போன்ற தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தின் சுமார் 22 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு முகவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலேயே இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் நடத்தப்பட்ட இடங்களில் இருந்து பல, இலத்திரனியல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

தேடுதல் நடவடிக்கைகான காரணம்
இலங்கையில் இருந்து செயற்படும் போதைவஸ்து கடத்தல்களுக்கு காரணமான குணா எனப்படும் குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்று அழைக்கப்படும் புஸ்பராஜா, ஹஜ் சலீம் என அழைக்கப்படும் பாக்கிஸ்தானில் இருந்து இயங்கும் போதைவஸ்து மற்றும் ஆயுதக் கடத்தல் முகவர் ஆகியோர் தொடர்பிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தின் சந்தேகம்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முகமாகவே இந்த போதைவஸ்து மற்றும் ஆயுதக் கடத்தல்கள் இடம்பெறுவதாக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்த மாதம் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam