விடுதி ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்பு (PHOTOS)
புத்தளத்தில் மூடப்பட்டிருந்த விடுதி ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா பொதிகள் பொலிஸ் குற்றப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துளு ஓயா பகுதியிலேயே 9 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் நேற்று (21) பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதியில் போதைப்பொருள்
விடுதி ஒன்றில் இவ்வாறு கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக முந்தல் பொலிஸ் குற்றப்பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி, விடுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு |




