வாகன விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான தாய்: பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி
புத்தளம், கொட்டுகச்சிய பகுதியில் இன்று (22) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியும்,மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனமடுவ - வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூவர் வைத்தியசாலையில்
புத்தளம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்வையிட்டு குறித்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவயில் இருந்து வந்த லொறி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மோட்டார் சைக்கிளில் இடவசதி இல்லாத காரணத்தினால் தான் ஆனமடுவைக்கு பேருந்தில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan