ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணத்துக்கான புதிய அமைப்பாளர்: ரணில் பகிரங்க அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எமது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம்.
தமிழர் விரோத போக்கு
இருந்தபோதிலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தியோகப்பூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பதோடு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான புதிய அமைப்பாளரும் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அருண் சித்தார்த் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக வருவதனால் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் விரோத போக்கை கொண்டுள்ளது என்பதை தென்னிலங்கை பேரினவாதிகளுக்குக் காட்டுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், பேரினவாதத்தில் தாமே அதிகம் சிறந்தவர்கள் என காட்டும் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |