ரோவின் நகர்வு தொடர்பில் ரணிலின் முடிவு
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 51-52 சதவீதம் ஜே.வி.பி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இருப்பினும், மொட்டுக்கட்சியின் அடுத்த தீர்மானத்தினை கருத்திற்கொண்டே இறுதி தீர்மானத்தினை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மொட்டுக்கட்சியின் ஆதரவுடன் ரணில் களமிறங்கும் பட்சத்தில் ரணிலுக்கும், அநுரவிற்கும் பலத்த போட்டியொன்று நிலவுமெனவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி அநுர வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படும் நிலையில், தேர்தலில் குளறுபடி ஏற்படும் பட்சத்தில் ரணிலின் பக்கம் வெற்றியாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
