மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலை இறுக்கமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் போரின் விளிம்பில் காணப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்குபற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு வருடத்திற்கு முன்னால் காசாவில் தொடங்கிய இராணுவ நடவடிக்கை தற்போது லெபனான் வரை பரவியிருப்பதால் பிராந்தியத்தில் உள்ள மற்றைய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அநீதிக்கு தீர்வு
மேலும், பலஸ்தீனம் சுதந்திர நாடாக மாறும் வரை மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பலஸ்தீனத்தில் ஏற்படுத்துவதற்கான முக்கிய கோரிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இரு நாடுகளின் கொள்கையை செயற்படுத்துவதாகும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் என அவர் கூறியுள்ளார். குறித்த மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |