பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருது - புடின் அறிவிப்பு
பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ரஷ்யா தாய்மார்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.
ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான 'Mother Heroine' விருதை மீண்டும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
இதன்படி, சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் முதன்முதலில் 1944ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட பாரிய மக்கள் இழப்பை அடுத்து "Mother Heroine" என்ற கௌரவப் பட்டத்தை புதுப்பிக்கும் ஆணையில் திங்களன்று புடின் கையெழுத்திட்டார்.
ஒரு மில்லியன் ரூபிள் ($16,000) வழங்கப்படும்
புடினின் ஆணையின்படி, தகுதிபெறும் தாய்மார்களுக்கு 10வது குழந்தை பிறந்தவுடன் ஒருமுறை 1 மில்லியன் ரூபிள் ($16,000) வழங்கப்படும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை போரிலோ அல்லது பயங்கரவாத செயல் அல்லது அவசரகால சூழ்நிலையிலோ இழந்தால் இன்னும் தகுதி பெறுவார்கள் என்று ஆணை கூறுகிறது.
ரஷ்யாவின் மக்கள்தொகை பல தசாப்தங்களாக தொடர்ந்து சரிவில் உள்ளது, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 400,000 பேர் குறைந்து 145.1 மில்லியனாகக் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவின் மக்கள்தொகை வீழ்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mother Heroine என்பது சோவியத் யூனியனில் கெளரவப் பட்டமாகும்
ரஷ்யா-உக்ரைன் போரின் போது மோசமடைந்துள்ள மக்கள்தொகை நெருக்கடியை மொஸ்கோ எதிர்கொண்டுள்ள நிலையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Mother Heroine என்பது சோவியத் யூனியனில் ஒரு கெளரவப் பட்டமாகும், இது ஒரு பெரிய குடும்பத்தை தாங்கி வளர்ப்பதற்காக வழங்கப்பட்டது, அதாவது 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு இது பொருந்தும்.
எவ்வாறாயினும்,1991 இல் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு இந்த பட்டம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
