உந்துருளியை பயன்படுத்தி சாகசம் காட்டிய இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
பொது வீதி ஒன்றில், முன்னால் உள்ள சில்லை உயர்த்தி, ஒற்றை சில்லில் உந்துருளியை ஓட்டி சாசகம் காட்டிய இளைஞனுக்கு 55,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல்- குளியாப்பிட்டி நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துடன், கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
வழக்கு தாக்கல்
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை, காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தமை, இலக்கத்தகடுகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமை, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயன்றமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பொலிஸார், குறித்த இளைஞனுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற விசாரணையின்போது சந்தேக நபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இதேபோன்ற குற்றங்களைச் செய்யும், ஏனைய இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் வகையில் தண்டனையை விதிக்குமாறு, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam
