லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Dharu Jun 07, 2025 07:53 AM GMT
Report

பொலிஸ் தலைமையகத்தில் உள்ள லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்றதாக(2017) முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தபோது பின்வரும் கருத்துக்களை பூஜித முன்வைத்துள்ளார். ​​

“லிஃப்ட் இயக்குபவரை தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் நோக்கத்துடன் தான் எதையும் செய்யவில்லை. சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்த போதிலும், லிஃப்ட் இயக்குபவர் அறிவுறுத்தல்களை மதிக்காமல் செயல்பட்டமை குறித்தே விசாரித்தேன்.

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

துன்புறுத்தல் நோக்கம்

தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது துன்புறுத்தல் நோக்கத்துடன் தான் எதையும் செய்யவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி என்னை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து கட்டாய ஓய்வுக்கு உத்தரவிட்டார்.

லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் | Pujitha Tried Attack Lift Operator

இந்த சம்பவத்தை நான் எதிர்கொண்டபோது முன்னதாக ஓய்வுபெற்ற குறித்த லிஃப்ட் இயக்குபவர் மீண்டும் கொண்டுவரப்பட்டு 2019 ஆம் ஆண்டு  சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அப்போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தான் நம்புகின்றேன்.  நான் வேலையில்லாமல் இருந்தபோது இந்த முறைப்பாடு குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய கீதம் இசைக்கப்படும்போது லிஃப்டை இயக்கக்கூடாது என்று அப்போது சுற்றறிக்கை இருந்தபோதிலும், ஏப்ரல் 11, 2017 அன்று அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதை ஆய்வு செய்யச் சென்றபோது, ​​லிஃப்ட் இயங்கி வருவதாகவும், அது யாருக்காக இயக்கப்படுகிறது என்று லிஃப்ட் இயக்குபவரிடம் விசாரித்தேன்.

லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் | Pujitha Tried Attack Lift Operator

தனிப்பட்ட முறையில் பழிவாங்கும், தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் நோக்கத்துடன் தான் எதையும் செய்யவில்லை. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு சென்று தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பரிதாப நிலை - விகாரைகள், ஆலயங்களில் தஞ்சம்

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பரிதாப நிலை - விகாரைகள், ஆலயங்களில் தஞ்சம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தன் மீதான வெறுப்பு மற்றும் பக்கசார்பான விடயங்களால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டது. மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்காக என்னை மேலும் துன்புறுத்தும் நோக்கத்துடன் இந்த வழக்குதாக்கல் செய்யப்பட்டது.

லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் | Pujitha Tried Attack Lift Operator

சுற்றறிக்கையின்படி வேலை செய்யுமாறும், தனிப்பட்ட பழிவாங்கலுக்காக தண்டிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் பின்னர் தனக்குச் சொல்லப்பட்டது.

என் மீதான சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை 6 வருடங்களாகக் கேட்ட பிறகும், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட விதம் மற்றும் சி.ஐ.டி அதிகாரிகளின் அணுகுமுறையால் நான் இன்னும் கவலைப்படுகிறேன்.

அதுதான் எனது விதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் செய்ததாகக் கூறி பொலிஸ் தலைமையகத்தில் உள்ள லிஃப்ட் இயக்குபவருக்கு ஆதரவாக தாக்கல் செய்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகள், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன் விசாரணைக்கு வந்தன.

இதன்பின்னர் பின்னர் மேலதிக ஆதாரங்களை சேகரிக்க வழக்கை ஜூலை 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம்: தூக்கி வீசப்பட்ட இருவர்

யாழில் முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம்: தூக்கி வீசப்பட்ட இருவர்

அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்ட ஜெயந்த ஜெயசூரிய

அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்ட ஜெயந்த ஜெயசூரிய

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US