யாழில் முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம்: தூக்கி வீசப்பட்ட இருவர்
யாழ். சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உலகேந்திரம் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் இன்னொரு நபரையும் ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துள்ளார்.
முந்திச் செல்ல முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி
இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள வளைவில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - கஜி





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
