250 ரூபாவிற்கு எரிபொருளை விற்பனை செய்ய முடியும் - கோப் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்
தற்போதைய நிலையில், இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலை 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை நுகர்வோருக்கு தற்போதைய விலையை விட 200 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தோராயமாக 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.
280 ரூபாவை வரியாக அறிவிடும் அரசாங்கம்
ஜூலை 1ம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசலுக்கு அரசாங்கம் 280 ரூபாய் வரி அறிவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார். ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு வருவதற்கான தகுதிகள் குறித்தும் கோப் உறுப்பினர்கள் ரத்நாயக்கவிடம் கேட்டறிந்தனர்.
தாம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக சிறப்புப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் (MBA) பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்ததாகவும் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
