வெளியானது ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் 'நஞ்சாகும் நிலம்' நூல்
ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் “நஞ்சாகும் நிலம்” சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று (13.01.2023) பிற்பகல் காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை ரி.எஸ்.யோசுவா தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுரைகள்
குறித்த நிகழ்வில் வாழ்த்துரையினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளாரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்திமூர்த்தியும், வரவேற்புரையினை ஆசிரியர் ப. தயாளனும், நூல் அறிமுக உரையினை கவிஞர் கருணாகரனும் ஆற்றினார்கள்.

நூலினை நூலாசிரியரின் பெற்றோர்கள் வெளியிட்டு வைத்தனர். இதனையடுத்து நூல் ஆய்வுரைகளை யாழ் பல்கலைகழக கலை பீடாதிபதி எஸ். ரகுராம் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும் வழங்கினார்கள்.
மேலும், நிகழ்வில் சூழலியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பொது மக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam