யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 'கனலி' மாணவர் சஞ்சிகை வெளியீடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் 'கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (04.10.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் ஆக்கங்கள்
சஞ்சிகையை கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் வெளியிட முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இந்த சஞ்சிகை வெளியீட்டில் மாணவர்களுக்கான வாழ்த்துரையினை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும், சஞ்சிகைக்கான கருத்துரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் வழங்கினர்.
ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'கனலி' சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


















16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
