புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியீடு
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
3 ஆம் தர கிராம அதிகாரி ஆட்சேர்ப்புக்கான பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
அரச சேவைக்கான நியமனங்கள்
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (08) காலை 10.30 மணிக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்குபற்றுதலுடன், கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் அரச சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam