முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள்! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் சவால்
இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தொடர்பில் தான் தெரிவித்த கருத்து குறித்து முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சவால் விடுத்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் தரம்
அவர் மேலும் கூறுகையில், “இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரம் குறைந்தது என்ற எனது கருத்தில் இன்று வரையில் நான் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளேன்.
எனது கருத்து தொடர்பில் முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யுமாறு மின்சார சபையிடம் நான் சவால் விடுக்கின்றேன். அவர்கள் வழக்கு தாக்கல் செய்யும் வரை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்.
இறக்குமதி
அவ்வாறு வழக்கு தாக்கல் செய்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பில் இதுவரை வெளிவராத பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எனக்கும் உதவியாக இருக்கும்.
நாட்டு மக்கள் அந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 19 மணி நேரம் முன்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan
