கழிவறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்
கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.
கழிவறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்..
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கமவிடம் மேற்கொண்ட விசாரணையில்,
கழிவறை கட்டணம்
கழிவறை கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அதன்படி, கழிவறைகளை பராமரிக்கும் தரப்பினருக்கு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முந்தைய விலைக்கு மாற்றியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
நேற்று பிற்பகல் முதல் தற்போதுள்ள 20 ரூபாய் கட்டணத்தின் கீழ் அதற்கான கட்டணங்கள் அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
