இலங்கை அரசாங்கத்துக்கு மற்றும் ஒரு உள்நாட்டு நெருக்கடி! நீதிக்காக கோரப்படும் பொதுமக்களின் ஆதரவு!
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போகச்செய்யப்பட்ட அல்லது தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதிக் கோரி கவனஈர்ப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கோட்டை தொடரூந்து நிலையத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது, குறித்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவும். நீதியை நிலைநாட்டவும் பொதுமக்களின் ஆதரவு கோரப்பட்டது.

2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட, 2000ஆம் ஆண்டு கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தின் சர்வதேச செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொழும்பின் புறநகர் அத்திட்டியவில் வைத்து கொல்லப்பட்ட சண்டே லீடர் ஸ்தாபகர் லசந்த விக்கிரமதுங்க, தாக்குதலுக்கு உள்ளான கீத் நோயர் உட்பட்ட செய்தியாளர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அத்துடன் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும் இந்த துண்டுபிரசுரங்கள் அமைந்திருந்தன.





என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri