மட்டக்களப்பில் தொடருந்து பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டம் (photos)

Batticaloa Colombo Sri Lanka Railways Department of Railways
By Kumar Mar 25, 2023 10:25 PM GMT
Report

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த தொடருந்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று (25.03.23) தொடருந்து  கடவையினை மறித்து மக்கள் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சுவிஸ்கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை தொடருந்து கடவையினை கடக்கும் வீதி பகுதியினை தொடருந்து  நிலைய ஊழியர்கள் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதியை தடை செய்தனர். இதனையடுத்து இந்த வீதிதடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபிரதேச மக்கள் ஒன்றினைந்து தொடருந்து கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதன்போது தொடருந்து கடவையினை மறித்து பொதுமக்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த தொடருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டு இரண்டு மணிநேர தாமத்தின் பின்னர் புகையிரம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் தொடருந்து பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டம் (photos) | Public Protest Against Removal Road Batticaloa

பெருமளவான பொதுமக்கள் தொடருந்து கடவையை  மறித்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன் அப்பகுதிக்கு வந்த கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

எனினும் அகற்றப்பட்ட வீதியை மீளபுனரமைத்துதரும் வரைக்கும் தாங்கள் இப்பகுதியை விட்டுச்செல்வதில்லையெனவும் குறித்த வீதியை நிரந்தரமாக நிர்மாணித்துதரும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் தொடருந்து பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டம் (photos) | Public Protest Against Removal Road Batticaloa

பிரதான வீதியே மக்கள் பாவனைக்கு உகந்தது

குறித்த வீதியுடாக மிகவும் குறைந்த நேரத்தில் மட்டக்களப்பு நகருக்கு செல்லமுடியும் என்பதுடன் இந்த வீதியில்லாவிட்டால் நீண்டதூரம் பயணிக்கவேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு மாணவர்களை கொண்டு செல்லும்போதும் கடமைகளுக்காக செல்லும்போதும் இந்த வீதியில்லாவிட்டால் நீண்டதூரம் சுற்றிச்செல்லவேண்டிய நிலையுள்ளதாகவும் இந்த பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பாரியளவில் எரிபொருளை செலவிடமுடியாத நிலையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் தொடருந்து பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டம் (photos) | Public Protest Against Removal Road Batticaloa

குறித்த வீதியை மீண்டும் பயன்பாட்டுக்கு ஏற்றமுறையில் தராவிட்டால் தாங்கள் இப்பகுதியிலிருந்து செல்வதில்லையெனவும் தொடருந்தினையும் செல்லவிடமாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தற்காலிகமாக புனரமைக்க உறுதி

இதன்போது பொதுமக்களிடமும் தொடருந்து நிலைய அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த வீதியை மீண்டும் பாவனைக்குவிடும் வகையில் மீண்டும் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைப்பு செய்வதாக உறுதியளித்தார்.

மட்டக்களப்பில் தொடருந்து பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டம் (photos) | Public Protest Against Removal Road Batticaloa

எனினும் அதனை புனரமைப்பு செய்தபின்னரே தாங்கள் கலைந்துசெல்வோம் என பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அகற்றப்பட்ட பகுதியை மீண்டும் தொடருந்து நிலைய வேலைப்பகுதி ஊழியர்கள் புனரமைத்ததை தொடர்ந்து மீண்டும் தொடருந்து செல்வதற்கு பொதுமக்கள் அனுமதியளித்தனர்.

எனினும் குறித்த பகுதியை நிரந்தரமாக புனரமைத்துதராவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US