கடவுச்சீட்டு அலுவலகத்தில் பெறுமதியான பொருட்களைத் தவறவிடும் பொதுமக்கள்
பத்தரமுல்லையில் (Battaramulla) அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் பொதுமக்களின் பெறுமதியான பொருட்கள் தவறவிடப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
தவறவிட்ட பொருட்கள்
அத்துடன் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான முனைப்பின் காரணமாக வரிசைகளில் ஏற்படும் நெருக்கடிகள், தள்ளுமுள்ளு போன்றன காரணமாக பொதுமக்கள் தங்களின் பெறுமதியான பொருட்களைத் தவறவிடும் நிகழ்வுகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
அவ்வாறு தவறவிடப்படும் பொதுமக்களின் தேசிய அடையாள அட்டை, சாவிக் கொத்துகள், வங்கி அட்டைகள் என்பவற்றை பொதுமக்களிடம் திருப்பி வழங்குவதற்கான கவுண்டர் ஒன்று கடவுச்சீட்டு அலுவலகத்தில் செயற்படுகின்றது.
எனினும் பொதுமக்கள் தவறவிட்ட மேற்குறித்த பொருட்கள் ஏராளமான அளவில் இன்னும் குறித்த கவுண்டரில் குவிந்திருப்பதாக கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |