தென்னிலங்கையில் தொடரும் வன்முறை : ஒருவர் சுட்டுக்கொலை
காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பிரதேசத்தில் 51 வயதுடைய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லி மீற்றர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எப்படியிருப்பினும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
