இலங்கையில் நடந்த மோசம் : ஆணாக நடித்த யுவதியின் அதிர்ச்சி செயல்
அனுராதபுரம் கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தள காதல்
இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டபோதே யுவதி ஒருவர் இளைஞனாக வேடமணிந்து காதலித்தது மாணவிக்கு தெரியவந்துள்ளது.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவியுடன் காதல் உறவை வளர்த்துக்கொண்டுள்ளார்.
19 வயது யுவதி 15 வயது மாணவியிடம் தன்னை ஆண் என அறிமுகம் செய்துள்ளார். தொலைபேசியில் ஆண் ஒருவரின் குரலில் அழைத்து இந்த உறவைப் பேணி வந்துள்ளார். இந்த உறவு சுமார் ஒரு வருடமாக தொடர்ந்துள்ளது.
மேலும் 15 வயது மாணவி தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் தனது காதலனாக நடித்த யுவதிக்கு அனுப்பியுள்ளார்.
அந்தரங்க புகைப்படங்கள்
இந்நிலையில் குறித்த மாணவியை தனது தந்தையை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். ஆனால், மாணவி மறுத்துள்ளார். தன்னை பார்க்க வராவிட்டால், முன்பு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால், மாணவி தொடர்ந்து தன்னை சந்திக்க மறுத்ததால் மாணவியின் புகைப்படங்களை 19 வயது யுவதி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
