இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் பொதுமக்கள் அச்சம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களையும், கோழிகளையும் இரையாக இழுத்துச் செல்வதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை என்றும், சிறுத்தை ஏற்கனவே தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோரிக்கை
லிந்துலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடித்து, வேறு பொருத்தமான சூழலுக்கு அழைத்துச் சென்று விடுவிக்குமாறும் மக்கள் கோருகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள ஒரு நபரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதோடு, மேற்படி வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை இழுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |