பெண்ணின் மரணத்திற்கு காரணமான வாகனம் பொலிஸாரால் மீட்பு: இருவர் கைது!
கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றிருந்த வாகனம் மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.
இதன்போது ஏ9 வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது

சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த ம.இதயரஞ்சினி என்ற 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இருவர் கைது
இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் அதன் சாரதி,மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடு பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan