நிபா வைரஸ் குறித்து இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து இலங்கையில் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த வைரஸால் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர் கண்காணிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான வழக்குகள் எழுந்தால் அதற்கு தேவையான அனைத்து சோதனை கருவிகளும் நாட்டில் உள்ளது.
வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய நிபா வைரஸ், பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளது. தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் மலேசியா விமான நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனையை அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை உள்ளது. நபருக்கு நபர் பரவுவது சாத்தியம் என்றாலும், அது மிகவும் அரிதானது. இலங்கையில் இதற்கு முன்பு ஒருபோதும் நிபா வைரஸ் பரவியதில்லை. தேவையற்ற பயத்திற்கு எந்த காரணமும் இல்லை.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
தொற்று நிலைமை
கடுமையான அறிகுறிகள் உள்ள எந்தவொரு நபரும் விமானத்தில் ஏற வாய்ப்பில்லை. எனவே இந்த நிலையானது நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழையும் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது. இங்கு எந்த ஒரு தொற்றும் பதிவாகவில்லை.
மக்கள் இந்த வைரஸைப் பற்றி பீதியடையவோ அல்லது நேரத்தை வீணாக்கவோ கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |