“பயங்கரவாத சட்ட ஒழிப்பு” தீர்மானிப்பது யார்? நீதியமைச்சரின் பதில்!
பயங்கரவாதத் தடைச் சட்ட ஒழிப்பு தொடர்பில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம ஆகியன இணைந்தே முடிவெடுக்கவேண்டும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள விடுத்துள்ள கோரிக்கை தொடர்பிலேயே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்
எந்தவொரு தனிஆளோ அல்லது நிறுவனமோ கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உள்ளது.
இறுதியில், அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம என்பனவே முடிவெடுக்கமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து உறுப்பினர்களை கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர சமூகத்துடனான ஆலோசனைகளைத் தொடர்ந்து, பெப்ரவரி 15ஆம் திகதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தால் ஏற்கனவே பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று ஆணைக்குழு கோரியிருந்தது.
பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன் பயங்கரவாதக் குற்றமும் இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்
அத்துடன் நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் பயங்கரவாதம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தது.
காலவரையற்ற தடுப்புக்காவல் அரசியலமைப்பை மீறுகிறது என்றும ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
இதேவேளை அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை பல தரப்;புக்களும் போதுமானதல்ல என்று விமர்சித்துள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




