வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான தற்காலிக கொட்டகைகள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான தற்காலிக கொட்டகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அங்கஜன் இராமநாதனிடம் வைத்தியசாலை பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக முதல் கட்டமாகத் தற்காலிக கொட்டகைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சிகிச்சைகளிற்காக வருகை தரும் நோயாளர்களிற்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அதன் முடிவுகள் கிடைக்கும் வரையும் காத்திருப்பதற்கும், குறித்த பரிசோதனைக்குமான இட வசதி போதாது காணப்படுவதாகக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு அமைவாகத் தற்காலிக கொட்டகை வசதியை மேற்கொண்டு தருவதாக அங்கஜன் இராமநாதன் உறுதியளித்திருந்தார்.
குறித்த கொட்டகைகளின் முதல் தொகுதி அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களினால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு தொகுதி எதிர்வரும் நாட்களில்
கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan