தேசிய மட்ட மல்யுத்த வீரர்களை தெரிவு செய்வதற்கான மாகாண மட்ட போட்டி
மட்டக்களப்பில் (Batticaloa) தேசிய மட்ட மல்யுத்த வீரர்களை தெரிவு செய்வதற்கான மாகாண மட்ட போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, வெபர் மைதான உள்ள அரங்கில் மாகாண சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வீ. ஈஸ்வரன் தலைமையில் இன்று (18.05.2024) நடைபெற்றுள்ளது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தேசிய மட்டப் போட்டி
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி வாசுதேவன் மற்றும் மாகாண மாவட்ட விளையாட்டு திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் போட்டியாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
வயது மற்றும் உடல் நிறை அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் கட்டங்கட்டமாக இடம்பெற உள்ளதுடன் இதில் தெரிவு செய்யப்படும் வீரர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |