மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் – சஜித்
மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடாத்துமாறு கோரியுள்ளார்.
பொத்துவில்லில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அரசாங்கம் உள்ளிட்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பனவற்றை காலம் தாழ்த்தாது நடத்தினால் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி ஒழுங்கைகளை அமைக்காது அந்தப் பயணத்தைப் பயன்படுத்தி மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri